வியாழன், 8 ஜனவரி, 2015

கயல்

வழக்கம் போல ரசிக்கும்படியான நகைச்சுவை முதற்பாதியில் தாராளமாக அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. ஊர் சுற்றி ரசிப்பதில் கிடைப்பவற்றை எளிய மக்களுக்கும் புரியும்படி விளக்கும் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. இது தான் க்ளைமாக்ஸ் என முடிவு செய்துவிட்டு வலிய நகர்த்திக் கொண்டு போவதை போல இருந்தது கயல் படத்தின் பிற்பாதி. பிரபு சாலமனின் முந்தைய இரண்டு படங்களைப் போல காதலர்கள் இறந்தோ, பிரிந்தோ போகவில்லை. சேது படத்திற்கு பிறகே (என் அறிவுக்கு எட்டி), துயர முடிவை வரவேற்க நம் மக்கள் பழகிக் கொண்டார்கள். அத்தகைய படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்ததாக நினைவு. ஒரு வேளை இந்தப் படத்திலும் அப்படி ஒரு முடிவு இருந்திருந்தால், சகல தரப்பினரும் உச்சி முகர்ந்து பரவலாக கொண்டாடி இருப்பார்களோ தெரியவில்லை. 

பெற்றோரை இழந்த சிறு குழந்தையை, வளர்க்கும் அந்தப் பெண்மணி, எந்த தைரியத்தில் கயலை கன்னியாகுமரி நோக்கி அனுப்பி வைக்கிறாள் என தெரியவில்லை? மனதிற்கு பிடித்த ஒரே ஒரு பார்வை, ஒற்றை வாக்கியம் மட்டுமே உதிர்த்தவனை, அடுத்த நொடியில் இருந்து முழுமையாக மனதில் சுமப்பதை ஏற்க முடியவில்லை. பதின்பருவத்தில் இது சகஜமாக இருக்கலாம் என யோசித்தால் மட்டுமே  விட்டுவிடலாம். ஆரோன் & சாக்ரடீஸ்க்கு, விளையாட்டுடன் கூடிய சாமர்த்தியம், அறிவு, தெளிவு என அத்தனையும் குவிந்திருப்பதாக முதல் சில காட்சிகளில் நம் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். இதைப் பயன்படுத்தி அந்த பிற்போக்கு கும்பலிடம் இருந்து எளிதாக தப்பித்து, வேறு மாதிரி பயணப்பட்டிருக்கலாம் கதை என தோன்றுகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவில், படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் அழகான பிரதேசம் குளிர்ச்சியூட்டி மகிழ்விக்கின்றது. இறுதியில் வரும் சுனாமி காட்சி அரட்டுகிறது. இத்தனை பரிதாபமான, ஏமாளியான, எதையும் யோசிக்காமல் செயல்படுத்துகிற கயல் மீது, அதீத எதிர்பார்ப்புடன் போனதாலோ என்னவோ அனுதாபம் மட்டுமே வருகிறது. 

3 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய படம்...
சரியாச் சொல்லியிருக்கீங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்! ஆழிப் பேரலை முடிவுக்காட்சி என்று முடிவு செய்து அதை நோக்கிக் கதையை நகர்த்தியிருப்பது தெரிகின்றது!