செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பாவம்!



காலாண்டுத் தேர்வில் இன்று சமூக அறிவியல் தேர்வை எழுதி முடித்துக் காத்துக் கொண்டிருந்த வருணை பள்ளியில் அழைக்க செல்கையில் மணி 12.
' எப்பட்றா எழுதின?'
' சூப்பர்... பர்ஸ்ட்டா எழுதிக் கொடுத்திட்டேன்ல'.


' சரி,  அந்த டயக்ராம் வரைய சொல்லிக் கேட்டு இருந்ததா?' என காலையில் மீண்டும் மீண்டும் வரைய வைத்த பாடப்பகுதியைக் கேட்டேன்.
'ஆமாமா, லாஸ்ட் ல கேட்டு இருந்தாங்க... அந்த ஃடிராபிக் சிக்னல் ஐ வரஞ்சேன், பர்ஸ்ட்டா கொடுக்கணும்னு, பக்கத்தில எது, எதுக்காகன்னு எழுதாம கொடுத்திட்டேன் மா', என்கிறான் சர்வ சாதாரணமாக.

வந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,
' சரி, காலைல கூட சொன்னேனே, வரிசையா வரஞ்ச மூணு வட்டத்தில, மேல, ஆரஞ்சு கலர் அடிக்க கூடாது, சிவப்பு கலர் தான் அடிக்கணும்னு, சரியாதானே அடிச்சே...'
' கலர் பென்சில் இல்லம்மா, அதுனால அடிக்கல'.
'காலைல பேக் ல வச்சுவிட்டேனே' என்று அவன் பையை சோதிக்க முற்படுகையில்...
' நான் எக்ஸாம் ஹால்க்கு உள்ளே எடுத்திட்டு போக மறந்திட்டேன் ம்மா'  என்றான் பாவமாக........

நடந்து செல்லும் வழியிலேயே ஒரே ஒரு அடியாவது அவன் முதுகில் பொறுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு... மூன்றாவது படிக்கிறான், நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் எதற்கும் கவலை இல்லாமல் இருக்கிறானே என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே நடந்தேன்.

' ம்மா, இந்த பேர்ட் புதுசா இருக்கு, இது பேரு என்ன?'
அவன் கை காட்டிய திசையில் ஒரு மைனா அமர்ந்திருந்தது.
' மைனா' என்றேன்.
' மைனா, மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுது ன்னு ஒரு பாட்டு வருமே, அந்த மைனாவா? ......... என்ற கேள்வியை கேட்ட உடன்,
' இதெல்லாம் நல்லா கேளு ... இந்த பறவையோட பேர் வச்சு இருந்த ஒரு அக்கா அவங்க ... இது வெறும் பறவை......',  என்று வேகமாக நடக்க தொடங்கினேன்.

' ம்மா... '
'இன்னும் என்னடா...'
'வீட்டுக்கு யாரு பர்ஸ்ட்டா போவோம்னு பாப்போமா? ' என்றவனிடம்.....
மீண்டும் உச்சத்தில் ஏறத் துவங்கியிருந்த எரிச்சலில்.......
' பாவம்.......' என்று வாய் அழுத்தமாக சொன்னது.
' யாரும்மா பாவம்? என்று ஆவலுடன் விசாரித்த வருணிடம்
' நாந்தான் .........................' என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னேன்.


6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உண்மையிலயே பாவம் தான் நீங்க...
மதுரை ல அடிக்கிற 12 மணி வெயில்ல எப்படியெல்லாம் உங்க பொறுமைய சோதிக்கிறாங்க...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

ஹாஹாஹா - நம்ம நிலைமை அவனுக்கு எங்கே புரியப்போகுது. என் மகன் சின்ன வயதில், அவள் அக்காள் கேட்டகேள்விக்கு.. திருக்குறளில் உள்ள மூன்று பால் என்ன சொல்? என்றதிற்கு..
திருவள்ளுவர் ஆண்பால், என்றான். எனக்கு எப்படி இருந்திருக்கும்.! கூல் கூல்..

thambu சொன்னது…

பாவம் வருண் அவன் மாறும் காலம் வரும் அதில் அவன் அவனை தொலைத்திருப்பான். பாவம் பெற்றோர் பிள்ளையை பிள்ளையாய் கூட வளர்க்க முடியாத சூழ்நிலை. பாவம் சமூகம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் தலைமுறையால் நாளை மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களால் நிரம்பி இருக்கப் போவதால்.
இந்த வயதில் ஒரு குழந்தைக்குத் தேவை ஒழுக்கம் பற்றிய அறிவு, சுத்தம் பற்றிய உணர்வு , சுற்றுப்புறம் பற்றிய விழிப்பு. நமது கவனம் அதில் இருந்தால் நலம். இது என் கருத்து :)

தீபா நாகராணி சொன்னது…

@Thambu நல்லா சொல்றீங்க... இதையே முடிவுரையா போடலாம் போல!
கட்டுரையா நீங்களும் எழுதுங்க தம்பி / அண்ணன்! :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா.... ஹா....

Philosophy Prabhakaran சொன்னது…

தயவு செய்து followers widget வைக்கவும்...