மிக
சமீபத்தில் காலச்சுவடு வெளியீடான, ஜி.நாகராஜன் ஆக்கங்களை தொடர்ச்சியாக
வாசித்தேன். 'நாளை மற்றுமொரு நாளே', என்ற நாவலை வாசிக்க, வாசிக்க, இதென்ன
இப்படி எழுதி இருக்கிறார் என்று சங்கடம் சிறிது நேரம் தொடர்ந்தது. வாசித்து
முடித்ததும், நம்மிடையே வாழும் அதே நேரத்தில் நாம் பார்க்கப் பிரியப்படாத
மனிதர்களைப் பற்றிய கதைக் களத்தில், கதாப்பாத்திரங்கள் அவற்றின் இயல்பில்
வாழ்ந்திருப்பதை அறிய முடிந்தது.
ஆரம்பத்தில் வாசிப்பதற்கு நெருடலாக இருந்த எழுத்துகள், தயங்கி தயங்கி பக்கங்களைப் புரட்ட செய்த வரிகள், போலித்தனமற்ற, அறைகிற உண்மையை உணர, உணர, அது வரை இருந்த அத்தனை தயக்கங்களையும் வரிசையாக உடைக்கிறார் ஜி.என். ஒரு கட்டத்தில் அவருடன் கைகுலுக்கி சௌகர்யமாக பயணிக்க முடிகிறது.
ஜனசக்தி, தாமரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, போன்ற பல
சிற்றிதழ்களில் வெளியான ஜி. நாகராஜனின் சிறுகதைகள் பெரும்பாலும், அதிகார
வர்க்கத்தின் கோர முகத்தையும், நாம் பொது வெளியில் பேச தயங்கும் நபர்களின்
வாழ்க்கையையும், எளிய மனிதர்களின் இயல்புகளையும் தெளிவாக படம் பிடித்துக்
காட்டுகின்றன.
'வெகுமதி' என்ற சிறுகதையில், செய்யாத தவறுக்காக, இன்னும் சொன்னால், பேருதவி செய்த கந்தன் என்ற வேலைக்காரனுக்கு வெகுமதியாக அளிக்கப்படும் சிறைவாசம், அந்த துறையில் பணிபுரிகிறவர்கள் அல்லது அவர்களின் வீட்டார்களோ ஒன்றிப் போய் படிக்க நேர்ந்தால், நிச்சயம் சில நிமிட குற்ற உணர்வுக்கு ஆள் ஆவார்கள்.
'வெகுமதி' என்ற சிறுகதையில், செய்யாத தவறுக்காக, இன்னும் சொன்னால், பேருதவி செய்த கந்தன் என்ற வேலைக்காரனுக்கு வெகுமதியாக அளிக்கப்படும் சிறைவாசம், அந்த துறையில் பணிபுரிகிறவர்கள் அல்லது அவர்களின் வீட்டார்களோ ஒன்றிப் போய் படிக்க நேர்ந்தால், நிச்சயம் சில நிமிட குற்ற உணர்வுக்கு ஆள் ஆவார்கள்.
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய திரைப்படங்கள்
கொண்டாடப்பட்டு வரும் இந்த நாட்களில், இன்றும் எழுதத் தயங்கும் பல
விஷயங்களை, 50, 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே போகிற போக்கில்,
அழுத்தந்திருத்தமாக தம் கதைகளின் வாயிலாக பதிய வைத்தவர் ஜி. என்.
ஒரு இடத்தில் ஜி. நாகராஜன் சொல்கிறார், " நாட்டில்
நடப்பதைச் சொல்லி இருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால்,
"இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?" என்று வேண்டுமானால் கேளுங்கள்;
"இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும்?" என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப்
பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முழுமையுந்தான் சொல்லியாக
வேண்டும்".
சுந்தர ராமசாமி க்கு, அவர் எழுதிய கடிதத்தில், "நீங்கள்
குறிப்பிட்டுள்ள பதிப்பகங்கள் எல்லாம் துடைப்பத்தால் கூட என் எழுத்துகளை
தீண்டாதவை" என்கிறார்.
இதிலிருந்தே தெரிகிறது, அவர்
வீட்டிலும் எத்தகையப் புறக்கணிப்பு நிகழ்ந்திருக்கும் என்று. அவரின்
மரணத்தின் பொழுது வெறும் ஐந்து பேர் மட்டும் உடன் இருந்ததை, அவரின் நண்பர்
கர்ணன் சொல்லக் கேட்ட பொழுது, மாமனிதர்களின் மறைவிற்கு விரல் விடும்
எண்ணிக்கையில் தான் கூட்டம் இருக்கும் என்று தோன்றியது. அதுவும், அவரின்
மகனைக் கூட இறுதி சடங்கிற்கு அவரது மனைவி அனுப்பவில்லை என்று
கேள்விப்பட்டதும், அந்த குடும்பத்தின் இடத்தில் இருந்து பார்த்தால்,
அவர்களும் பாவம் என்றே தோன்றுகிறது.
அவருக்குப் பின் இத்தகைய துணிச்சலான எழுத்தாளர்கள் நடந்து செல்வதற்கு மாதிரி சாலையை அமைத்து தந்தவர் ஜி.என்.
அவருக்குப் பின் இத்தகைய துணிச்சலான எழுத்தாளர்கள் நடந்து செல்வதற்கு மாதிரி சாலையை அமைத்து தந்தவர் ஜி.என்.
மனம், வாக்கு, சொல், செயல் அத்தனையும் ஒன்றாகவே இருக்கும் அபூர்வப் பிறவிகளில் ஒருவர்.
ஆங்கிலத்திலும் நாவல், சிறுகதைகள் எழுதிய, கல்லூரியில்
ஆசிரியராகவும் பணியாற்றிய ஜி, என், எந்த சமரசமும் எவருடனும் செய்து
கொள்ளாமல், அவர் மனது சரி என்று சொல்வதை மட்டுமே கடைசி வரை செய்து, தன்
ராஜாங்கத்தில் ராஜாவாகவே வாழ்ந்தார். இறுதிக் காலத்தில், பொருளாதார ரீதியாக
மிகவும் கஷ்டப்பட்டவர்.
கடைசி நாட்களில், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் குளிர்கிறது என்று அவர் சொன்னதும், போர்வைகளை போர்த்தியவர்களிடம், ' இந்தக் குளிர் சிதைக்குள் வெந்தால் தான் அடங்கும்', என்றாராம்.
கடைசி நாட்களில், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் குளிர்கிறது என்று அவர் சொன்னதும், போர்வைகளை போர்த்தியவர்களிடம், ' இந்தக் குளிர் சிதைக்குள் வெந்தால் தான் அடங்கும்', என்றாராம்.
எங்கள்
மதுரை மண்ணில், பிறந்து, வாழ்ந்து உரிய அங்கீகாரத்தைப் பெறாமலே, இன்னும்
சொன்னால், அது பற்றிய துளிக் கவலையும் இன்றியே மறைந்தாலும், இன்று அவரது
குடும்பம், அவரின் பெருமைகளை உணர்கிறது, இதன் வாயிலாக நாம் அறிவது என்று
சொல்லி எதையும் எழுதுவதை ஜி. நாகராஜன் விரும்பமாட்டார் என்பதால்,
முற்றிபுள்ளி வைத்துக் கொள்கிறேன்.
6 கருத்துகள்:
இந்தக் குளிர் சிதைக்குள் வெந்தால் தான் அடங்கும்....தைரியமான வார்த்தைகள்
கண்முன் காணும், நடக்கும் பல யதார்த்த நிகழ்வுகளை கண்டும் காணாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில்( ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்) அதை முகத்துக்கு நேராய் நிறுத்தி, முடிவு எடு எனத் தூண்டும் மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவர்.
இவர்களின் உள்ளத் தேடல் ஒரு தீராத தாகம். சுற்றி இருப்பவர்களை தகிக்கும் கனல். எவரையும் அனுசரித்துப் போகாத இவர் போன்றோரை எவரும் அனுசரிப்பதும் கடினமே .
தமிழகத்தில் மிகவும் இயல்பாக எழுதிய படைப்பாளர்களில் ஜி. நாகராஜனும் ஒருவர். அவர் படைத்த நாளை மற்றும் ஒரு நாளேவில் வரும் பாத்திரங்கள் மனதில் நிற்கிறார்கள். சிறப்பான பதிவு தீபா. அவரை நினைவு கூர்ந்ததற்கு. அவரது வாழ்க்கை முறை, எந்த வகையிலும், எந்த தளத்திலும் ஏற்கத்தக்கது அல்ல.
சிறந்த பதிவு. ஜி.நாகராஜன், தமிழில் மிகவும் இயல்பாக படைத்தவர்களில் ஒருவர். அவரது நாளை மற்றுமொரு நாளேயின் காட்சிகள் நினைவில் நிற்கின்றன. அவரை நினைவு கூர்ந்ததற்கு பாராட்டுக்கள் தீபா. எந்த தளத்திலும் அவரது வாழ்க்கை முறை ஏற்புடையதல்ல. எழுத்தாளர் சுந்தரராமசாமி, அவரது வாழ்க்கை பற்றி பதிவு செய்துள்ளார்.
வழக்கம்போல ஆகச்சிறந்தவர்களை நாம் ஒதுக்கியே வந்திருக்கிறோம்
வழக்கம்போல் ஆகச்சிறந்தவர்களை நாம் ஒதுக்கியே வந்திருக்கிரோம்.
கருத்துரையிடுக