கடந்த
சில நாட்கள் மட்டும் காலை உணவாக பழங்கள் எடுத்துக் கொண்டதில், மூன்று
நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் பழங்கள் சாப்பிட்டேன். முதல் பழத்தை சாப்பிட்டு
முடித்திருக்கையில் இடது கடைவாய்ப் பற்களுக்கு இடையே சிறிய அளவிலான சக்கை
சிக்கித் துன்புறுத்திக் கொண்டிருந்தது. விரல் நகத்தாலேயே எடுத்துப் போட்டு
விட்டு, மீண்டும் பழங்களை சாப்பிட்ட பொழுது ஒவ்வொரு முறையும்
சிக்கிக்கொண்டு இருப்பது போல இருந்தது. நாவால் துளாவியும், கைவிரல்
நகங்களாலும் எடுத்துப் போட்டுக் கொண்டே கடமையை முடித்தேன். அதற்கடுத்த
நாளும், இடது தாடை சற்று வலி கொடுத்ததால் தவிர்க்கலாம் என்று எண்ணியதை
தவிர்த்து, மீண்டும் ஆரஞ்சுப் பழங்களை உரித்து சாப்பிட, சாப்பிட வலியின்
அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. காபி அருந்தும் பொழுது மட்டும்,
அதன் வெப்பம் பட்டு மட்டுப்பட்ட வலிக்காக, வழக்கத்தை விட கூடுதல் காபி
அருந்தினேன்.
"என்னை எப்படியாவது காப்பாத்திருங்க டாக்டர் , நெறைய வேலை பாக்கி இருக்கு, ப்ளீஸ் ... " என்றதும், சிரித்துக் கொண்டே பிரத்யேக இருக்கையில் அமர சொன்னார். ( நின்று கொண்டே வேலை பார்க்கும் மருத்துவர் - பல் மருத்துவர் :P )
(வாய் பேச முடியாத நிலையில் இது போன்ற கேள்வியைக் கேட்டவரிடம், சைகையில் பதில் சொல்ல முயற்சிக்கவில்லை. :P )
முதலில் சிக்கிய மெல்லிய துணுக்கு உள்ளே மாட்டிக் கொள்ள, தொடர்ச்சியாக சில துணுக்குகள் அடைத்துக் கொள்ள, நகத்தை உபயோகிக்கும் பொழுதெல்லாம், அது எளிறை அழுத்தி அழுத்தி உண்டாக்கிய வலியை, வழக்கம் போல, பட்டது போதாது இன்னும் வேண்டும் எனக்கு என்பது போல கிராம்பின் உதவியால் பொத்துப் போக செய்திருக்கிறேன். இறுதியில் ஸ்கேலிங் என்று பற்களை சுத்தம் செய்த பிறகு, முக்கால் வாசி வலி குறைந்திருந்தது.
5 கருத்துகள்:
ஆஹா..இப்போதான் ஒரு ஆரஞ்சை உள்ள தள்ளிட்டு வந்தேன்..
உங்களுக்குச் சரியானதே..அதுக்கு மகிழ்ச்சி.
பல் வலி வந்தது வேதனை தான். அதையும் விவரித்த எழுத்தாற்றல் அற்புதம். வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani அருமை மகன் Rajanna Venkatraman எனது பக்கத்தில் பகிர்கிறேன். I ask my Sons - Saravanan Rathnavel, Rajavel Ramarajan - to read & record their comments. Fantastic writing. Heartiest Wishes.
நல்லா எழுதியிருக்கீங்க.... வாழ்த்துக்கள் சகோதரி....
உங்கள் உடலின் நோவையும் நகைச்சுவை இழையோட எழுதும் பாங்கு உங்கள் எழுத்தின் வளர்ச்சியை உணர்த்துகிறது. இதில் இவ்வளவு அராத்து பண்ணியும் உங்கள் பல்லைப் பிடுங்காமல் விட்ட மருத்துவரின் தொழில் தர்மம் மெய் சிலிர்க்க வைக்கிறது . நடக்கட்டும் உங்கள் ராஜ்ஜியம் தீபா :)
எங்கள் ராம்குமாருக்காக மறுபடியும் படித்தேன். இன்று (28 அக்டோபர்) திரு ராஜண்ணா பிறந்த நாளுக்காக போட்டிருந்த பதிவில் இந்தப் பதிவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவருக்காகத் தேடி link கொடுத்தேன்.
"சரி, இந்த மாத்திரை எல்லாம் எங்க கிடைக்கும்?"
"எந்த மெடிக்கல் ஷாப் லயும் வாங்கலாம்."
"அய்யே, இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் கீழே விளம்பரம் கொடுத்திருக்கிற கடைல தான் வாங்க சொல்லணும், அப்போ தான், அவங்க திரும்பவும் உங்களுக்கு இது மாதிரி நோட்டு அடிச்சுக் கொடுப்பாங்க', "
என்றதும்,
'"வீட்டில தேட போறாங்க, கிளம்புங்க " - கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதை... = அருமையான பதிவு. வாழ்த்துகள் அருமை மகள் Deepa Nagarani
கருத்துரையிடுக