ஞாயிறு, 5 மே, 2013

ஈர்த்த மனிதன், எனக்குப் பிடித்த காபி, எனக்குப் பிடித்த ஊஞ்சல்..

அக்டோபர் 10, 2012, அன்று  ஃபேஸ்புக் பரண் இல், "சாளரம்", என்ற பகுதிக்காக எழுதப்பட்டது.

எழுத்துலகின், பல ஜாம்பவான்கள் குடியிருக்கும் இங்கு...
எனக்கென்று சிறிய அளவில் கூட எழுத்துப் பின்னணி இல்லாத போதும்,
இரண்டு வருடங்களுக்கு முன்பு, எழுதுவதற்கென்று நேரம் ஒதுக்கி,
ஆரம்பப் பாடத்தை ஆரம்பித்தேன்.
இன்று இந்த சாளரம் பகுதிக்காக
என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து,பிடித்ததை கேட்டு, எழுத செய்து,
வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பரணிற்கு
கை கொள்ளாத காட்டுப் பூக்களுடன் கூடிய
குளிர்ச்சியான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அங்கீகாரத்தை எனக்கு கிடைத்த உயரிய விருதாக எண்ணி பெருமிதம் கொள்கிறேன்!
பரணின் புதிய பகுதியான
~சாளரம்~ நமது ஃபேஸ்புக் பதிவர்களின்
ரசனைகள் குறித்து பேசுகிறது

இந்தவார சாளரத்துக்காக தீபா நாகராணி..

ஆதரிப்போம் இப்புதிய முயற்சியை..

 ஈர்த்த மனிதன் -    வாசிம் அக்ரம்.
==========================

        பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், தெரிய வந்த, வாசிம், 
நான் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தை அதிகப் படுத்தியவன். ஊரெல்லாம், டெண்டுல்கர் புராணம், பாடிக் கொண்டிருந்த அந்த நாட்களிலும், எனக்கு அவனைப் பிடிக்கும். 

துல்லியமான, பிரமிக்க வைக்கும் வேகப் பந்து வீச்சால், பேட்ஸ்மென்களை, மிரட்டி ரசிகர்களை மகிழ்ச்சியுறச் செய்தவன். தேவைப்படுமென்றால், ரன் அடித்தும் அணியின், வெற்றிக்கு உதவியவன். மைதானத்தில், உடன் விளையாடுபவர்களைத் தோழமையுடன் நடத்துவதாகட்டும், திட்டமிட்டபடி வெற்றியைப் பறிப்பதாகட்டும், ஆக்ரோஷத்துடன் பந்தை வீசுவதாகட்டும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகட்டும், எதிலுமே ஒரு கம்பீரம் மிளிரும். 

உலக கோப்பை கிரிக்கெட்டில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம், தோற்ற பின், மைக்கில் பேசும் பொழுது, தன் மனைவி உட்பட ஒவ்வொரு வருக்கும், நன்றி சொல்லி, அமைதியாக அந்தத் தோல்வியை, ஏற்றுக் கொண்டு பேசிய காட்சி இன்னும் என் மனதில் உள்ளது. 

கடுமையான நீரிழிவு நோயால் அவதிப்பட்ட பொழுது, தொடர் சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து வெளியே வந்து, மீண்டும் தனது, பந்து வீச்சை மேம்படுத்திய திறன் எப்பொழுதும் என்னை மலைக்கச் செய்யும். எப்பொழுதும், மனைவியைப் பெருமையாகவே பேசும... பலரின் உள்ளத்தை கொள்ளை கொண்ட, வாசிமின் பிரியமான மனைவி இங்கு சென்னையில்தான் காலமானார்..என்பது கூடுதல் செய்தி..

 கேப்டன் என்றால், இப்படித் தான் இருக்க வேண்டும், என்று ஒரு முன்மாதிரியான வாக்கு, செயலின் காரணமாக தோற்றமும் ரசிக்கும்படி ஆகிப் போனவன். 

வாசிமுக்காகவே, இந்த பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருக்கலாம் என்று கூட எண்ணுவதுண்டு.....

----------------------------------------------------------------------
    
        எனக்குப் பிடித்த காபி.....
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
        நினைவு தெரிந்த நாளில், என் அம்மா, நரசுஸ் காப்பி பொடியை பாலில், சர்க்கரையுடன் கலந்து பின் வடி கட்டி தருவார். இயன்ற அளவு இனிப்பை அதிகம் சேர்க்கச் சொல்லி குடிப்பேன். 
அதன், பின், ப்ரு (இன்ஸ்டன்ட் காப்பி), கலப்பது எளிதாகவும், சுவை கூடுதலாகவும் இருப்பதால், குடும்பத்தோடு ப்ருவிற்கு மாறினோம். 

எந்த ராஜா, எந்த ஊர் போனாலும், எனக்கு இரு வேளை, காப்பி குடித்தே ஆக வேண்டும்.

        கடந்த பத்து வருடங்களாக, சமையல் செய்முறைகளில் முதலில் கட்டாயத்தின் பேரிலும், பின், விருப்பத்தின் பேரிலும் ஈடுபட்டதால், வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டேன். ஏகப்பட்ட ஃபில்ட்டர் காப்பி பொடிகள், வாங்கி, அடர்த்தியான பாலில் கம்மியான சர்க்கரை கலந்து, முயற்சி செய்து, ஓரளவு வெற்றியும் பெற்றேன்.

        சன் ரைஸ், நெஸ்கஃபே , என்று மாற்றி, மாற்றி குடித்தாலும், சென்னையில், ஹாட் சிப்ஸில் குடித்த பிறகு இதற்கு மிஞ்சி ஒரு சுவை சொர்க்கத்தில் கூட இருக்க முடியாது என்று மனதார சான்றளித்தேன். அங்கு, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், ஒரே நேரத்தில் இரண்டு காப்பி எல்லாம் வாங்கி சுவைத்தது உண்டு.

        முதன் முதலில் ஹாட் சிப்ஸ் காப்பியை சுவைக்கும் பொழுது, நாவில், துளி துளியாகப் பட்டு, உள்ளே இறங்கும் பொழுது, அதிகாரம் இருந்தால், சென்னையையே அந்தக் காப்பி போட்ட கைகளுக்கு எழுதி வைத்து விடலாம் போல உணர்வு எனக்கு.

        ஒவ்வொரு மிடறாக உள்ளே இறங்கும், காப்பி, உடலின் எல்லா பாகங்களையும் புத்துணர்வாக்கி, மனதையும் நிறைக்கும் தருணத்தில், நானே காப்பியாக ஆகியிருக்கிறேன். இனிப்பை பெயரளவிற்கு சேர்த்துக் கொண்டு, அதிகமான காப்பி பொடியை நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் கலந்து, சூடு கொஞ்சமும் குறையாமல் பருகும் ஒவ்வொரு துளியிலும் உள்ள கசப்பு, பிடித்த ஒரு கசப்பாகவே மாறிவிட்டது.

        திரும்பிப் பார்க்கும், எந்த ஒரு நாளிலும் உணவை கூட ஒதுக்க முடிந்த என்னால், காப்பியை ஒதுக்கி விட்டிருக்க முடியவில்லை. சமீபத்தில், எத்தனையோ பேர் சொல்லிவிட்டனர், இவ்வளவு காபி எல்லாம் குடித்தால் விரைவில் முக சுருக்கம் வந்து, வயதானது போல தோற்றம் வந்து விடும் என்று. " ஒளவையார் ரொம்ப கஷ்டப்பட்டு பாட்டெல்லாம் பாடி வயதானவராக மாறியது போல எனக்கு காப்பியாலே கிடைத்தால் பரவாயில்லை" என்று, இப்பொழுதும், காப்பியை அருந்திக் கொண்டேதான் சொல்கிறேன்.
------------------------------------------------------------------------

        எனக்குப் பிடித்த ஊஞ்சல்...
=================================

        என்னுடைய சிறுவயதில், வீட்டின் அருகே இருந்த உறவினர் ஒருவரின், மரத்தில் இரும்பு சங்கிலியைக் கொண்டு, மரப் பலகையுடன் தொங்க விடப்பட்டிருந்த ஊஞ்சல் பார்க்கவே அம்சமாக இருக்கும். அதில், ஆடும் சுகத்திற்காக, நான்கு பேர் எப்பொழுதும் போட்டி போட்டிக் கொண்டே இருப்போம். இதில் உள்ள சிறப்பு, நல்ல அலை நீளத்தில், ஆடக் கூடியதாக இருந்தது. 

எத்தனையோ நாட்கள், நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும், பின்னால் யாரவது தள்ளி விட்டு ஒதுங்கி கொள்ள, ஆடிய நாட்களில் அதிக பட்ச ஆனந்தத்தை வழங்கியது அந்த வேப்ப மரத்து ஊஞ்சல். எந்நேரமும் எனக்கே ஊஞ்சல் வேண்டும்  என நான் படுத்திய  பாட்டில், என் பாட்டி இவ்வாறு கூறுவார்... இவ ஊஞ்சலுக்காகப் புருஷனைக் கூட வித்துடுவா என்று... ( எங்கள் ஊர்ப் பக்கம், இது போன்று ஒரு சொலவடை இருக்கிறது.)

        இப்பொழுது நவீன ஊஞ்சல் வீட்டின் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கிறது...ஒரு ஆள் உள்ளே நன்கு சாய்ந்து அமரும் வண்ணம் பெரிதாக இருந்தாலும், குறைவான தூரத்தில் தான் ஆடித் திரும்ப முடியும். ஆனாலும், ஆடுவது ஒன்றே பிரதானமாக உள்ளதால், இதுவும் பிடித்திருக்கிறது.

        மனம் முழுவதும் உற்சாகம் பொங்கும் நேரங்களில், வேகமாகக் கால்களால், தள்ளி ஆடுவதும், சோகம் அப்பிப் போய் இருக்கும் கணங்களில் சும்மா அதில் உட்கார்ந்திருப்பதும், தினசரி வாடிக்கை தான். 

#அப்படி அமைதியாக அமர்ந்திருக்கும் நேரங்களில் மேலே உள்ள சங்கிலி லேசாக அசைந்து கொடுத்து மெதுவாக என்னைத் தாலாட்டிக் கொண்டே இருப்பதாலேயே எனக்கு விருப்பமான மடியாகிவிட்டது. #

இன்வேர்ட்டர் பொருத்தப்படாமல் இருந்த நாட்களில், நள்ளிரவில் மின்சாரம் போகும் பொழுதெல்லாம், அதிகமான புழுக்கத்தால், ஒரு மணி, இரண்டு மணிக்கெல்லாம் இதில் அமர்ந்து ஆடிக் கொண்டே காற்றை வாங்கி கொண்டிருப்பேன். 

பின்னால் சாய்ந்து கொண்டு.., 
கால்களை மடக்கியவண்ணம்  உட்கார்ந்து கொண்டு.., இதிலமர்ந்து அலைபேசிக் கொண்டிருப்பேன்..

 பெரும்பாலான என் அலை பேசி பேச்சுக்களையும், என் மன உணர்வுகளையும் பார்த்துக் கொண்டே 
..கேட்டுக் கொண்டே..,
எதையுமே வெளிக்காட்டாமல், 
ஒரு ஞானியைப் போல அதன் கடமையான ஆட்டுவித்தலை மட்டுமே செய்யும்.அது..

        அதிகமான நேரம் இதில் அமர்ந்திருப்பதாலேயே எந்த ஊர் சென்றாலும், அதிகம் நான் தவறவிடுவது ஊஞ்சலே. 

பார்த்த மாத்திரத்திலேயே, ஊஞ்சல், உள்ள வீடுகள் எல்லாம் கூடுதல் நெருக்கமாகிவிடுகின்றன. செல்லும் வீடுகளில் சற்றும் தயங்காமல், ஊஞ்சல் கண்ட இடத்தில், மனம் விரும்பும் வரை ஆடும் நேரங்களில், நான் நானாகவே இருப்பதாக உணர்கிறேன்..நம்புகிறேன்.

-பரண் சாளரத்துக்ககாக தீபா நாகராணி

4 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகான பகிர்வு தீபா.

perumal karur சொன்னது…

சூப்பர்...

perumal karur சொன்னது…

மேடம் நான் பேஸ் புக்ல மேஞ்சுக்கிட்டு இருக்கும் போது உங்க பேஸ் புக் பேஜ் பார்த்தேன் . அதுல உங்க இந்த ப்ளாக் இருந்தது .

அப்படியே உங்க பிளாக்கை சிறிது வாசித்து பார்த்தேன் .... எழுத்து நடை அபாரம் ....தொடர்ந்து உங்கள் பிளாக்கை வாசிக்க ஆசைபடுகிறேன் .. எனது மெயிலுக்கு உங்கள் பதிவுகள் வருவது போல உங்கள் பிளாக்கில் வசதி ஏற்ப்படுத்தி கொடுத்தீர்கள் என்றால் எனது மின்னஞ்ச்சலை அதில் பதிந்து வைத்து கொள்வேன் . ஏற்பாடு செய்வீர்களா ப்ளீஸ்

ஜெயக்குமார் சொன்னது…

//முதன் முதலில் ஹாட் சிப்ஸ் காப்பியை சுவைக்கும் பொழுது, நாவில், துளி துளியாகப் பட்டு, உள்ளே இறங்கும் பொழுது, அதிகாரம் இருந்தால், சென்னையையே அந்தக் காப்பி போட்ட கைகளுக்கு எழுதி வைத்து விடலாம் போல உணர்வு எனக்கு.// இவ்வளவு நல்ல காஃபியா, அதுவும் சென்னையில்? நானும் ஒரு காஃபி வெறியன். சராசரியாக 5 முதல் 7 காஃபி ஒரு நாளைக்கு குடிப்பேன். இன்னதுதான் என்றில்லாமல் கடுங்காப்பி, பால்பவுடர் கலந்து செய்த காஃபி, பால் காஃபி,டிகாக்‌ஷன் காஃபி, என எந்த காஃபியும் ஓக்கேதான்.. இந்த முறை ஊருக்கு வரும்போது அவசியம் பருக வேண்டும்..