செவ்வாய், 7 மே, 2013

பப்பாளி!

திட்டமிட்டு விதைப் போடாமல் வீட்டின் பின்னால்
தானே துளிர்த்து வளர்ந்தது பப்பாளிக் கன்று
இலைகளையும் பூக்களையும் கண்டு நீர் விட்ட கூடுதல் கவனிப்பில்
மாம்பழத்துடன் போட்டியிடக்கூடிய சுவையில் நிறையப் பழங்களை தந்தது
சற்று முன் பெய்த காற்றுடன் கூடிய மழையைப்  பொறுக்க மாட்டாமல்
துணி காயப்போடும் கம்பியில் சாய்ந்து ஆயுளை முடித்திருந்தது
இனி செய்வதற்கு ஏதுமில்லை என்று வெட்டி முழுதாய் சாய்த்ததில்
மரத்தின் சிதறிய பாகங்களின் காட்சியும்
இதே இடத்தை நிரப்பும் நாளைய வெறுமையையும் எண்ணி
சோகம் அப்பிய மனதுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து உள்ளே வந்தும்
பப்பாளியின் மணம் நாசியின் வழியாகவும் மனதை அடைகிறது... அடைக்கிறது! 

1 கருத்து:

காகுந்தன் சொன்னது…

பாப்பாளி மரத்தின் விசேசம் என்னவெனில் தானாக வரும்,வளரும்.நாம் தண்ணி காட்டினால்,அது நன்றி காட்டும்.